சில சம்பவங்களை பார்க்கும் போதும்,
கேட்கும் போதும் எம்மை அறியாமல் எம் இதயம் அரியப்படும். உலை தள்ளும் நுரையாய்
உணர்ச்சி கொப்பளிக்கினும் செய்யவழியறியாய் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, பின் அவை மறக்கப்படும்....
நாயும் கல்லும் ஒன்றாக மாட்டியது போல்
கணனிப் பலகை கைக்கெட்டியதால் இச்சம்பவத்தை பதிவெற்றுகிறேன்...இது பிரதேசவாதமல்ல...........
அண்மையில் குடாநாட்டு
பாடசாலைகளுக்கிடையிலான பெண் பிள்ளைகளுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்
இடம்பெற்றிருந்தன. இதில் குறிப்பாக தென்மராட்சி வலய தெரிவணிக்காக பல
சுற்றுபோட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் “வன்னிச்
சனம் ”
என்றழைக்கப்படும் மனித இனமெ இல்லாத அண்மையில் இடம்பெயர்ந்த வேற்றுக்கிரக வாசிகள் (
வவுனியாவில் அது “அகதி
ஊத்தைகள் ”
என அழைக்கப்படும்) இனத்தை சார்ந்த ஓர் மாணவி ஒர் மிகச்சாதாரண ஒர் பாடசாலை சார்பாக
விளையாட வந்திருக்கிறாள். (கல்லூரிகளில் கல்வி விலை ஜஸ்தியோ என்னமோ). மிகத்திறமயாக
விளையாடும் அவள் நுட்பங்கண்டு பாடசாலை அணியில் அவள்
சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறாள். எதிர் அணிகளுக்கிடையிலான முதல் சுற்றுப்போட்டிகளின்போதெ
அவள் திறமை பலர் கண்களை உறுத்தியெடுத்திருக்கிறது.
இவற்றுக்கிடையில் துர்றதிஸ்டவசமாக
இடப்பெயர்வின் போது அவள் உடமைகள் அனைத்தயும் இழந்திருந்தவேளை (உறவுகளைக்கூட
எவரயேனும் இழந்தவளா தெரியவில்லை) தனது பிறப்பத்தாட்சிப் பத்திரத்தையும் சேர்த்து
இழந்திருந்திருந்தாள். இன்னும் “வன்னிப்” பிதேசசெயலகங்களெ
சரியாக இயங்க ஆரம்பித்திருக்காத இன்னிலையில் அத்தாட்சிப்பத்திரங்களை
பெற்றுக்கொள்வதில் எவ்வளவு சிக்கல் சிரமம் இருக்கும் என்பதை யாவரும் உணர்வீர்கள்...இருப்பினும்
தனது படம் வயது மற்றும் இன்னோரன்ன விடயங்களை உறுதிப்படுத்தும் ஒர் துண்டினை தற்போது
கல்விகற்கும் பாடசாலை அதிபரிடம் அவள் பெற்றுவைத்திருந்தாள்.
எதிர்பாராத வெற்றிவாகைசூடி குடாநாட்டின்
தென்பகுதியின் மிகப்பிரபல பாடசாலையுடன் மோதும் போட்டி நிலையேற்பட்டது.வழமையாகவே
இப்பாடசாலைதான் முதலிடம் பெறுவதாகவும் அதற்காக குறித்த ஓர் நடுவர் பாடுபடுவதாகவும்
சொல்லிக்காட்டப்பட்டது.எமக்கு அது தேவையற்ற விடயமும் கூட. இன்னடுவர் ஆரம்பம் முதலே
இம்மாணவியை இனங்கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போட்டி நாளன்று ஆரம்பம்
முதலே கடும்போக்குடன் காணப்பட்ட குறித்த நடுவர் அனைவரினதும்
பிறப்பத்தாட்சிப்பத்திரத்தை பரிசோதிக்க ஆரம்பித்தாராம்.(இந்த மாணவியிடம்
பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லை என்ற புல-நாய்-வுத் தகவல் கிட்டியிருக்கும்
போல...)அம் மாணவி தன்னிடமிருந்த துண்டினையும்காட்டி அனைத்தயும் எடுத்துச்
சொல்லியும் புரியவில்லையாம் அத் தற்குறிக்கு. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்
எண்டே சொல்லீட்டிருந்திச்சாம் அந்தக் குரங்கு. இறுதியில் பாவப்பட்டு நிலமை விழங்கி
சொன்னாராம் “ OK, ஒறிஜினல்
இல்லாட்டியும் பறவாயில்ல போட்டோகொப்பிய கொண்டு வாரும் நான் விளையாடவிடுறனென்டு”.
அடப்பாவித்
தமிழா உன்ர இனமீது நீ கொண்ட பற்ற எண்ணும்போது பூனைக்கும் புல்லரிக்குமப்பா.......அதுவும்
கடைசியா நீ சொன்ன வசனத்தில தான்டா உன் மெய்ப்புத்தி புலனாகிறது./////////இவங்கள
எல்லாம் நம்பியாடா இவ்வளவு பெரிசா எதோ ஆரம்பிச்சாங்க/////////// இச் சந்ததி மட்டுமல்ல எச்சந்ததியும் உருப்படாதென்பதற்கு
நீ “ஒரு சோறு பதம்”.
“பொய்
சொல்லக்கூடாது பாப்பா”
என சொல்லித்தந்த பாடசாலைகளெ தன்பிள்ளைகள் சொல்வதை நம்பாமல் ஆதாரத்துக்காய்
அதையிதைப்பார்க்கும் அநியாயம்......
தான் சமர்பித்த எதுவும் எடுபடாமல் தனக்காக
பக்கமிருந்து உறுதிப்படுத்த எவருமின்றி, எதிர்பார்புடன் வந்து
தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் அந்த மாணவியின் உணர்வை ஒருகணம் உணர்கின்றேன்.
சொத்துக்கள் அனைத்தயும் இழந்து மிச்சமிருப்பது
“கற்போம்
நிமிர்வோம்”
என்கிற எண்ணம்தான் எம் பிள்ளைகளிடம். அதுவும் எவ்வளவுக்கு கைகூடும் என்கிற
சந்தேகம் இவ்வாறான மனதைப் பாதிக்கும் சம்பவங்களினால்.
இது கதையல்ல நிஜம்.
பின்குறிப்பு : இவ்வாறான
பிறப்பத்தாட்சிப்பத்திரம் போன்றவற்றால் இதுபோல பாதிக்கப்படும் எமது மாவட்ட
மாணவர்க்கு, விரும்பினால் புவி அல்லது என்னைத் தொடர்புகொண்டால் எம்மால் முடிந்த
உதவிபுரிய சித்தமாய் இருக்கிறோம்.