2002. வரப்போகுதாம் வரப்போகுதாம் எண்டுகொண்டிருந்த
A/L ரிசல்ட்டும்
வந்திட்டு.எல்லாரும்
ஆளாளுக்கு ஓடித்திரியிறாங்கள்.கொஞ்சப்பேர் கல்வித்திணைக்களப்பக்கம்
ஓடுறாங்கள் கொஞ்சப்பேர் பள்ளிக்கூட
அறிவித்தல்
பலகைபாக்க ஓடுறாங்கள் அங்கயும் இல்லாட்டில்
அதிபர் வீட்ட
எண்டு முழுப்பேரும் 3A
வந்திடும் ரிசல்ட்டை வாங்கிகொண்டு அப்பிடியே யூனிவசிற்றிக்கு
ஓடிப்போய்
வகுப்பில இடம்பிடிச்சிடோணும் கணக்கா
பறக்கிறங்கள்.நான்
முதலே இந்த மூண்டிடமும் ஓரு ரிப் ஓடிக்களைச்சுப்போய் இன்னும் பாசல் உடைக்கேலயாம்
எண்ட பதிலில களைச்சுப்போய் வீட்டு
விறாந்தையில கதிரையில
இருந்தன்.அப்பதான்
அதிபர் ரிசல்ட் பேப்பரை ரோட்டிலயே
வாசிச்சுக்கொண்டு
போனதில என்னுடய ரிசல்ட்டையும் கேட்டுக்கொண்டு
மூச்சிறைக்க
வந்தான் கடம்பசோதி..’’மச்சான்
உனக்கு ரெண்டு பாடம் காலைத்தூக்கீட்டடா ’’
நாசமாய்போவான் வாயில வசம்பவைச்சு தேய்க்க..
சே...கோயில்களுக்கு வைச்ச நேத்தியெல்லாம்
வீணாப்போட்டுதேடா....
’’உவன் பொய் சொல்லுறானே?..’’ மேல்மனது சுரண்டி விட்டது.
உள்மனதோ ...’’ எக்சாம்
எப்பிடி
எழுதினி எண்டு தெரியும் தானே மச்சி...ஐந்தொகை சமப்படல....நாலவது
ஆறாவது கேள்விகள் என்னெவென்றே தெரியாது....கடசிக்கேள்வி செய்யேக்க தனுசியாவும் நானும்
அந்திநேரம் அழகான மலைச்சாரலின் கீழ் ’’அழகானகாற்றுக்கும் அது தேடும் பூவுக்கும் காதலா
காதலா பாட்டு போகேக்க எக்சாமினர் மேசையத்தட்டி
பேப்பரை
வாங்கிக்கொண்டு போனது...உனக்கு
உது தாண்டா ரிசல்ட்...அடித்துச்சொன்னது.
உடம்பு புக் கெண்டு வேர்த்தது..
உள்ளுக்குள்ள நடுங்க தொடங்கியது....
வெட்கம்.. அவமானம்...
பெரிய கீறோ மாதிரி படிச்சு பில்டப்
போட்டாயே...என்
செய்வேன் என் செய்வேன்...என் குடும்பம்
எப்படி வெளியால
தலைகாட்டும்...காணுறவன்
கண்டவன் எல்லாம் ரிசல்ட்டைக்கேப்பாங்களே....வெளிநாட்டில இருக்கிற மறந்த சொந்தங்கள்
எல்லாம்
மறக்காமல் கடிதம் எழுதி ரிசல்ட்டைக்கேப்பாங்களே...
யாழ்ப்பாணம் யூனிவசிற்றிக்கு அங்கால
உலகம் இருக்குமா எனக்கு தெரியாது...என் டெனிம் ஜீன்ஸ் கனவுகள் காற்றில்
பறந்தனவோ....ஐயகோ...
பத்துத்தரம் காதலைச்சொல்லியும் காறித்துப்பின அந்த சப்பபிகரும் என்னைக்கண்டால் கல்லால்
அடிக்குமேடா...மூண்டு
பாடம் இல்லாட்டி வருவாய்துறையில கூட கணக்கெழுதேலாதேடா...
பொங்கி வந்த கண்ணீர் காட்சிகளைக்
தெளிவற்றதாக்கியது..
வானம் இருண்டது.....பூமி
நடுங்கியது..
யூனிவசிற்றி எண்டர் பண்ணினவனைத் தவிர
மற்ற எல்லாருக்கும் இந்த காட்சிய
விளங்கப்படுத்த
தேவையில்லை..
நெஞ்சுக்குள் தீயொன்று அனலாய் எழுந்தது..
பேசாமல் செத்துடுவமா?
இனி எதற்கு வாழ்வு?
முற்றத்தில் கிணறு மசகெண்ணை எடுக்குமளவு ஆழம் தோண்டியும் தண்ணியில்லாமல்
எனக்காக காத்துக்கிடந்தது.. செத்தாலும் இந்த காணிக்க தாண்டா சாகோணும்
மனமும் சிபாரிசு பண்ணியது...மாடு பாஞ்சாலும்
எண்டு உயத்திக்கட்டின
கிணத்துக் கட்டில,
கப்பிக்
கப்புக்கு போட்ட பூவரசில பிடிச்சுக்கொண்டு
உன்னி ஒருகாலை கிணத்துக்கட்டில
போட்டன்.
உடன
செத்திடனும்..இதிலயாவது
சிறப்பு சித்திகிடைக்கோணும் சித்திவிநாயகா....
தனுசியா, சுமதி, ஆரபி,குமுதா ...இந்தப்பிறவியில ஒண்டு சேராட்டியும் அடுத்த
பிறவியிலாவது சேரணும்...அடுத்த
காலையும் தூக்கிப்போட்டேன்.கண்களை
இறுக்க மூடிக்கொண்டு..
வண்......
ரூ...
விழ விழ எழு எழு
நட நட
இனி ஒரு பகை வர
பொடிபட நட நட
ஆட்டோவில ரெண்டு தடியக்கட்டி அதில
ஸ்பீக்கர வச்சு அரசியல்துறைக்காறர் ஏதோ
அறிவிப்புச்செய்ய எங்கட
வீட்டுகேற்றடியில நிண்டுகொண்டு பாட்டு..
திக் கென்றது.ஏதோ சரியாப்
படல.தற்கொலை கான்சல்.
வலதுபக்க மூளை: பேசாமல்
இயக்கத்துக்கு போவமே?
இடதுபக்க மூளை
: சமாதனம்
வரப்போகுது.இனி
சண்டையும் இல்லை.ராங்கும்
கிடைக்காது கடைசிவரை வீரவேங்கையாகத்தான் இருக்கணும் உனக்கு
ஓகேயா ..
விறு
விறு என திரும்ப நடந்து வந்து
மீண்டும் கதிரையில் இருந்து கொண்டேன்.
மயக்கனிலை..மாயனிலை...சூனியனிலை....ஏதும் அறியாப்பாலகனாய் கூதலுக்கு
சுறுண்டு படுக்கும் நாயாய் கதிரையில் சுறுண்டு கொண்டேன்.
மச்சான் கீரன் ஓல்சிலோன்ல செக்கண்ட்
ராங்காம் ரோட்டால ஒருத்தன் கத்திக்கொண்டே
போனான்..
* * * *
இதயம் இயங்க ரத்தம் வழங்கிறது
முடியுரு நாடி..அதில
கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் படிஞ்சு
ஒருகட்டத்தில குருதி
விநியோகம் இல்லாமல் போகும் போது
இதயம் தனது செயற்பாட்டை
செய்யமுடியாமல் போக திண்டாடும் இதத்தான்
காட்டராக் என்பினம்.இந்நிலை
வரும்போது நரகவலி ஏற்படும்.அவ்வலியை
தாங்கமுடியாத மூளை தன் உணர்வாற்றலை நிறுத்திக்கொள்ளும்...மயக்கநிலைக்குப்
போகும்
* * * *
அந்த நிலைதான் எனக்கும் ஏற்பட்டது.
என்னது கீரன் ஓல்சிலோன் செக்கண்ட்
ராங்கா..
பைனல் எக்ஸ்சாமுக்கு ஒருகிழமைக்கு
முந்திதான் ஒற்றைப்பதிவே படிக்க
வெளிக்கிட்டான்...இதுதான்
பிறக்கும் போதே மூளையோட பிறக்கோணும்
எண்டுறது..
நெஞ்சு வலி இடியாக மாறியது
நினைவுகள் மின்னலென வெட்டியது
கோவம், அவமானம்
மேகமென
ஒடுங்கியது-
அது
இலச்சிய வெறியாக மாறி மழையாக கொட்ட
ஆரம்பித்தது.
துள்ளி எழுந்தேன்.சாரத்தை
மடித்துக்கட்டி காலை உயர்த்தி தொடையில்
தட்டி சபதம்
போட்டுக்கொண்டேன்
‘’ டேய் எடியுகேசன்
டிப்பாற்மென்ருகாரங்களா
இந்த நாளை கலண்டரில் குறிச்சு வச்சுக்கோ
அடுத்தவருசம் இதே
மாதம் இதே நாள் 3A
எடுத்து
மெரிட்டில கம்பஸ்ல கால எடுத்துவைக்கல...அது வரைக்கும் கிளிநொச்சிப்பக்கம்
திரும்பிப்பாக்கிறதில்லை...இண்டையில இருந்து என் படிப்பு லெவலே
வேற..என் அறிவு
தாகத்துக்கு தண்ணி தரக்கூடிய ஒரே
இடம் யாழ்ப்பாணம்
கன்னாதிட்டி...
கட்டுறா வண்டிய..
….......
சைக்கிள் கரியரில துணிமணி,
இவ்வளவு
நாளும் தொட்டே பாக்காத பாஸ்பேப்பர்
புத்தகங்கள்
பஞ்சத்தில அடிபட்டவன் போல எழுதிற
சிறுகுறிப்பு பேப்பர்
கட்டுக்கள் எல்லாத்தையும் உரப்பையில
கட்டி முக்கியமா
போக்குவரத்து கண்காணிப்பு பிரிவின்ர
வழியனுமதித்
துண்டையும் எடுத்துக்கொண்டு...
சிங்கம் ஒண்டு புறப்பட்டதே அதுக்கு
நல்ல காலம் பொறந்திடுச்சு நேரம்
பொறந்திடுச்சு...
…......
பரந்தன் சந்தி தாண்டி கெமிக்கலடி
வரேக்க சிங்கம் புறப்பட்ட வேகம்
சவ்விளுக்கத்தொடங்கியது.
இருந்தும் இலச்சிய நெருப்பு சுமந்ததினால் வெய்யில்
வேர்வை எதிர்க்காத்து
எதுவும் தெரியாமல் போய்க்கொண்டிருந்தது.
கான்ரில்ல சைக்கிள் ரேஸ்காரர் மாதிரி கவிண்டுகொண்டு ஓடினதில
ஆனையிறவு வந்தது
தெரியல.அந்த முடக்கில
திரும்பத்தான் முன்னுக்கு போய்க்கொண்டிருந்த
சைக்கிள்
குத்தி கால் பிரேக் போட்டு நிண்டது.நானும் சடின் பிறேக் போட்டு நிமிந்து
பாத்தா நம்ம புவிராசலிங்கம்..டேய் புவி
எண்டுகொண்டு பாத்தால்
அவன் ரெண்டு உரப்பை கட்டிக்கொண்டு வாறான்.
புவி : என்ன
மச்சான் லேற்..எனக்கு
முதலே உனக்கு ரிசல்ட் தெரிஞ்சிற்றில்லே
நக்கல்ல்ல்
’’பாவி இவனுக்கும்
ஆரோ பாட்டுபோட்டு
குழப்பிப்போட்டாங்கள் போல’’
என்
இலச்சிய
குறியில் இவனும் ஒரு போட்டியா வரப்போறானே
எண்டு நினைச்சாலும்
பறுவாயில்ல இம்முறை என் படிப்பு
லெவலே வேற.இவனெல்லாம்
ஜு ஜுப்பி
டபிள் போட்டுக்கொண்டே இருவரும்
மிதித்தோம்..
முகமாலை தகவல் கொட்டிலுக்க போனா
சுதாவும் நிசாந்தனும்.
டேய் எப்படா வெளிக்கிட்டீங்க?
நாங்க
போன கிழமையே வெளிக்கிட்டம்.இண்டைக்கு
தலகாணி பாய் எடுக்க வந்தனாங்கள்.
டேய்
மொத்த ஊரும் முன்னுக்கே கிழம்பிருச்சா..நாம
தான் லேற்றா???
…...
இயக்கத்தின்ர சோதனைச்சாவடி போமுகள் எல்லம்
நிரப்பி
மீள்திரும்புகை எண்ட இடத்தில கம்பஸ் என்ரபண்ணினால் மட்டும் எண்டு நம்பிக்கையுடன்
எழுதிப்போட்டு ,ஆமின்ர
செக்பொயிண்ட் செக்கிங் முடிச்சு
தாண்டினால் யாழ்ப்பாணம்
ரோசா பஸ்கார் வாங்கோ வாங்கோ வெளிக்கிடப்போகுது
எண்ட கத்தில மயங்கி,
மச்சான்
சினிமா பாட்டு கேட்டு கொண்டு பம்பலா
போகலம் எண்ட முடிவில
சைக்கிள் சாமான் எல்லாத்தையும் மேல
ஏத்திப்போட்டு உள்ளுக்க
போய் இடம்பிடிச்சம்.
...........
எண்பது அடிக்கொட்டில் நாலு. நிலத்துக்கு சீமேந்து போட்டு இடைக்கிடை பான்(Fan) லைட்
போட்டு புறவெட்டில வாங்கு மேசை ...யாழ்ப்பாணத்தாருக்குரிய பணக்காரத்திமிருடன் யாழ்.பொருளியல்
கல்லூரி. ப்பா... கண்ணைகைபுரம் அ.த.கா தோத்துப் போகும்.பின்ன உதயனில அரைப்பக்க விளம்பரம்
வலம்புரியில அரைப்பக்க விளம்பரம் தினமும் வாறதுக்கு ஒரு முகாந்திரம் இருக்கவேணுமா இல்லையா.
500 க்கு அட்மிசன் பீஸ் கட்டினாதான் உள்ள விடுவன் எண்டு கத்திய காட்டினான் செக்கி...A/L
மூண்டு வருசமும் சத்தியசீலன் சேரிட்ட காசுகட்டாமல் ஏமாத்தினத்துக்கு வசமா மாட்டிக்கொண்டோம்.
அதுவும் நாங்கள் கிளிநொச்சிப் பெடியள் எண்டு
சொல்ல கத்திய வைச்சிட்டு தன் இடுப்பில அவன் ஏதையோதேட எதுக்கு வம்பெண்டு சலண்டர் ஆனோம்....பின்வாங்கார்
பின் வாங்கார் எண்டு ஏதோ ஒரு பக்கி சொன்ன வாசகத்த
நம்பி பின்வாங்கு அத்தனையையும் நம்ம
உரப்பை செட் மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்டோம்..பிறகுதான் தெரிஞ்சுது கரும்பலகையில
எழுதிற எதுவும் கடைசி வரை ஒருத்தருக்கும் தெரியேல்ல எண்டு.
குடுத்த காசுக்கு குறைவில்லாமல் கரெக்ட் டைமுக்கு
அந்த உருவம் வகுப்புக்க எண்டர். த கிங் ஆப் எக்கனாமிக்ஸ் வரதராஜன். விவேக் போய் அப்பதான்
வடிவேல் பிரசித்திபெற்றுக் கொண்டிரு ந்த காலம். சட்டெண்டு பாக்க நம்மாள் தான் இங்க
மாறி வ ந்துட்டாரா எண்ட மாதிரி இருந்திச்சு . கையில சோக்பீஸ் எங்க தவறி விழுவ்திடுவமோ
எண்டு நிலத்த பார்த்த படியே தொங்கித் தொங்கி
அந்தபக்கமும் இந்தபக்கமும் ஒரு நடை.குந்தியிருக்கிற
200 பேரில ஆரைப்பாத்துத்தான் மனுசன் வகுப்பெடுக்கிறது. அதால போத்தம் போதுவா மனுசன் நிலத்தப்பாத்தே வகுப்பெடுக்க பழகீட்டார் போல. என்னமச்சான்
எனக்கு விளங்கல சுதாவின் காதில் மெல்லக்கடித்தேன்..மச்சான் ஆள்தான் தமிழீழ பொருளியல்
அறிஞ்ஞர். தலைவருக்கே ஆள்தான் பொருளாதரம் விளங்கப்படுத்துவராம் எண்டா பாரன் எண்டு ஒரு
கொசுறுச்செய்திய வேறு எடுத்துவிட்டான்.ஆளிட்ட படிச்சா பொருளியல் A தான் எண்டு வேற குழையடிச்சு
விட்டான். நிமி ந்து பார்த்தால் வரதராஜன் சேருக்கு பின்னால ஒரு ஒளிவட்டம். சாட்சாத்
அந்த கிருஸ்ணபகவானே தான்...
........
வகுப்பில உச்சக்கட்டம் நாம் வாய்பிளந்து இதெல்லாம் பாடத்திட்டத்தில சேத்துட்டாங்களா
கணக்கா குந்தியிருக்க ஒரு கேள்விய போட்டார் சேர்..
ஜரோப்பியன் ச ந்தை பங்கு சுட்டியில் ஏற்படும் மாற்றம்
வட்டிஸ் எபக்ட் ரு த ஸ்ரீலங்ககன் சேயார் கோல்டர்ஸ்
தகரவெக்கையில
மைக்கிரோ தூக்கம்போட்ட சுமன் ஏதோ இங்கிலீசு படமாக்குமெண்டு திடுக்கிட்டு போய்
இருந்தான். முழிச்சுக்கொண்டிருந்த நிசாந்தன்
ஏதோ நோட்ஸ்தான் சொல்லுறார் எண்டு எழுத ஆரம்பித்தான்.
நம்மபாடோ எக்சாமில சொய்ஸ்ல விட்டிடலாம் எண்டு தீர்மானம் நிறைவேற்றி அமைதியாக இருந்தேன். நம்ம சங்க உறுப்பினர்களோ
மகி ந்த ஆட்சி எதிர்க்கட்சி போல அரவமில்லாமலே இருந்தார்கள். அப்பதான் அ ந்த அதிசயம்
முன்வாங்கில இரு ந்து யாழ்ப்பாணம் ஒண்டு தமிழும் ஆங்கிலமும் கலந்து கட்டி அந்த விடைய
சொல்லிக்கொண்டிருக்கவே உவந்தாண்டா அடுத்த ஓல் சிலொன் பெஸ்ட். ராங்க் பண்ணிக்கொண்டோம்.
கொஞ்ச நேரம்
துள்ளித்துள்ளி கேட்டுக்கொண்டிருந்த வரதராஜன் சேர் நக்கல் சிரிப்போண்டொட சொன்னார்
நீங்க எல்லாம் கிணத்து தவளையள் எண்டு
நம்மாளு
ஒருத்தன் உசாரா எழும்பிச்சொன்னான் சேர் யாழ்ப்பாணப் பெடியள் கிணத்து தவளை எண்டா அப்ப
நாங்கள் எல்லாம் என்ன குழாய்க்கிணத்து
தவளைகளா?
தவளைகளா?
தமிழீழப் பொருளாதாரமே ஒருகணம் ஆடிப்போய் நின்றது.....