பள்ளிக்கூடத்து
முதல் மணி என்றுமே எனக்கு பிடித்தமான ஓன்றாக
இருந்ததில்லை.அடிப்பவனையே.அடிக்கத்தோன்றும் ஆத்திரம் வரும்
எனக்கு.தேவாரம்,நற்பொழிவு,அதிபரின் அதட்டல் பேச்சு..../////// முதல்
பாடவேளைக்காக அடிக்கப்படும் அடுத்த மணி..பலம் மொத்தம் திரட்டி மணி
அடிக்கும் அந்த எட்டாமாண்டு மாணவன் எனக்கு இப்போது நினைவில் இல்லை.
முதல் பாடம் கணக்கீடு..
இரண்டாம் பாடம் கணக்கீடு..
மூன்றாம் பாடம் கணக்கீடு..
நாலாம் பாடம் பிறீ...
பாட அட்டவணை மனதில் எரிச்சலை ஏற்படுத்தும்.அதுக்கு மட்டுமேன் பிறீ போட்டிருக்கு அதுவும் எக்கவுன்ஸ் தான்.. சே... பேசாம தொடந்தும் “பயோ”வயே
படிச்சிருக்கலாம்...என்ன தான் முருகதாஸ் சேர் முழியால மிரட்டினாலும்
அடிக்கப்படும் மணிகளுக்கு கட்டுப்பட்டவர். தற்சமயம் அது அவருக்கு
கேட்டிருக்காவிட்டிருப்பினும் “சேர் பெல் அடிச்சிட்டு”
என்று வாய்திறந்து சொல்லக்கூடிய ஒர் வீர தமிழ் மாணவன் வார்த்தய
மறுவிசாரணையின்றி ஏற்றுக்கொள்வார்,நிறுத்திக்கொள்வார்.ஆனா இவா மட்டும்
மற்றப்பாட ஆசிரியர் வந்தாலும் சேர் ஒரு நிமிசம் இப்ப முடிச்சுடுறன் எண்டு
விண்ணப்பம் வேறு போடுவா........
முதல்நாள்
எங்கள சத்தி சோ் வகுப்பில கொண்டு போய் இருத்திப்போட்டு பிரபாளினி ரீச்சர்
தான் எக்கவுன்ஸ் எடுப்பா அவா தான் உங்களின்ர வகுப்பு ரீச்சர் என்ற போதே
கணக்கியலில் “எலி வால் பூந்திட்டு”
தர மாணவன் எனக்கு லப்பு டப்பு அடித்துக் கொண்டது.கீரன், சட்டர், நான்,
மீரா, அங்கால.... அங்கால..../// நினைவில் இல்லை/// நான்காம் வரிசையில்.
முதல் நாள் கொடுத்த கணக்கு பண்றதில் எல்லாரும் மும்முரம். .நான்,பிக்கு
மட்டும் இன்டைக்கு தானே புதுசென்றபடியால் கொப்பீல எங்கட கைவண்ணங்களை
காட்டி கொண்டிருந்தோம்.நீல பென்,சிவப்பு பென்,புது அடிமட்டம்,பெரிய கட்டு
CR கொப்பி, எங்கட பிள்ளையளும் படிச்சு எக்கவுண்டன் ஆயிடுவாான் ...ஆயிடுவாான்...... என்கிற கனவுடன் எம் பெற்றோரின் செலவீனங்கள். “ரீச்சர் வாறா”
சக மாணவியின் எச்சரிக்கை வார்த்தைய தொடர்ந்து புற்றூளர் பேனாக்கள் மோதி
ஓயும் சத்தம்.சடார் என்று திரும்பி பார்த்த போது அரைச்சுவர் வைத்த
வெளியினூடு உச்சந்தலை ஒன்று மட்டும் வகுப்பை நோக்கி ......யாராச்சும்
எட்டாம் வகுப்பு பிள்ளையைப் பார்த்து ரீச்சர் எண்டு
நினைச்சுப்போட்டுதுகள் எண்ணக்கணக்கு முடியுமுன்னே அனைவரும் எழும்பி
கோரசாக குட்மோர்னிங் ரீச்சர்ர்......தனக்கே உரித்தான அந்த கருங்கலறில்
சாறி ஒரு கையில் சில புத்தகங்கள் நெஞ்சில் அழுத்தியபடி மறுகையில் சில
வெண்கட்டிகள் அந்த பாச சிரிப்பு இன்றும் என் நெஞ்சில் பதிந்த அந்த முதல்
நாள்.”பின்”வாங்காருக்கு”
கேட்காதே என்று சற்று குரலெடுத்து பேசினாலும் சுருங்கும் முகம்.பிரபாளினி
என்ற ஆசானை வரப்போகும் இரண்டு வருடகாலம் எமக்கு வழிகாட்டியாய்,ஒளி
காட்டியாய் ஆரம்பித்த முதல் நாள்.........
எமது
எதிர்கால கனவுகள் ஒன்று திரட்டி அத்திவாரம் போடப்படுவதற்காக அவளிடம்
ஒப்படைத்து எமது வகுப்பில் கிட்டத்தட்ட 25 மாணவர்கள்.இந்துக் கல்லூரி 2002
வர்த்தகப் பிரிவில் சில மாணவர்கள் பெயர்கள் இப்போது எனக்கு
ஞாபகமில்லை.புலிகளின் குரல் ரவர் புவி, ஆறாமாண்டு பெண்பிள்ளைகளின் காதல்
மன்னன் கீரன்,ஆட்டிஸ்ட் சட்டர்,கிருஷன்,பால்சுறா நிசாந்தன்( நன்றி
கெட்டவன்) ,ஓமக்குச்சி முரளி,காரும்புலி வசந்தன்,தீபன், காட்டான்
சிவசூரியா,காமன் ஜோஜ்,தொப்பி சுதா,நகைகடை கணேசன்,நக்கல் வெள்ளை
உதயகுமார்,நான் (ரொம்ப நல்லவென்டா) கல்லுரியின் உச்ச அதிகாரவர்க்க வகுப்பு
மாணவர்கள் , எமக்கு ஒரே கடிவாளம் பிரபாளினி எனும் சொல்.
இந்துக்
கல்லூரியின் 2001 ஆண்டு மாணவர்கள் பண்ணிய நியாயம் வேண்டிய உரிமை
சத்தியகிரகத்தில் அநியாயமாக நாமும் இணைந்து வன்னேரிக்குளம் அ.த.க.பாடசாலை
ரோட்டுக்கரை ஒத்த பாலைக்கு கீழ குந்தியிருந்த நிகழ்வில்,அடுத்த நாள்
வகுப்புல ரீச்சர் அழததை நம்மில் யாரும் மறந்திருக்க மாட்டோம் என்று
நினைக்கிறேன்.என் 13 வருட பாடசாலை சர்விசில் எம்மை அழவைத்தவர்களை நியாயமாக
மறந்துபோனோம்..நாம் செய்த தப்புக்கு, தனது வகுப்பு மாணவர்கள் செய்த
தப்புக்கு தன் வழிநடத்தலில் ஏற்பட்ட தப்போ என்ற எண்ணத்துடன் அவள் அழுத
சம்பவம் ...........///////.............அன்றுதான் பிரபாளினி ரீச்சர்
என்னை பாதித்தவர்களில் ஒருவர்.ஆனாலும் கோழியை பிடிக்காது முட்டய
பிடிக்கும் எனும் கதயாய் கணக்கீடு பிடிக்காது.. ரீச்சரை ரொம்ப
பிடித்துப்போனது எனக்கு.அன்றய நேரத்தில் ஊரில் பல போட்டித்திரு விழாக்கள்
இடம்பெற்றாலும் எந்த திருவிழாவிலும் சிக்காத, உண்மையாய் தனித்துவமாய்
நடந்த தேர்த்திருவிழா எங்கட பிரபாளினி ரீச்சர்.
2001
காலப்பகுதியில் அவரின் இரண்டாவது பிரசவகாலம் என நினைக்கிறேன். ஒரு 03
மாதகால இடைவெளி எமக்கு பின்னடைவை தந்துவிடும் என்பதால் சனி, ஞாயிறு அது
இது எண்டு என்ன இடைவெளி இருந்தாலும் புகுந்து 03மாதம் முன்னதாகவே பாடங்களை
கனியவைத்த காரிகை.( இறுதிப்பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகதான்
கீரனாக்கள் இரட்டைப்பதிவுக்கு பேசனல்கிளாஸ் போனது வேற கதை)
ஒப்படை
செயல்பாட்டில் தனிமாணவர்,குழு மாணவர் செயற்பாடு என அவ்வேளை இருந்தது.குழு
மாணவர் ஒப்படையில் நான், வசந்தன்,கீரன், அடுத்தது சுதா என நினைக்கிறேன்,
எங்களிட்ட இருந்து அந்த ஒப்படை பூர்த்திய பெறுவதற்கு ரீச்சர் பட்ட பாட்ட
தனியா எழுதலாம்.அவனவன் சாதாரணமாய் அது இது எண்டு செய்திட்டுபோக
தனித்துவமாய் நாங்கள் செய்யவேண்டுமெண்டு கங்கணம்கட்டி “மக்கள் வரவேற்பு கொட்டகை”
அமைக்கிறதெண்டு ரீச்சரிட்ட பெமிசன், பின்னேரம் பள்ளிகூடம் விட்டாப்போலும்
நிண்டு வேலை செய்ய அதிபரிட்ட பெமிசன் எடுத்து மண்கல் அரியிறம் எண்ட
போர்வையில பள்ளிக்கூடத்துல முன்னுக்கு நிண்ட வளஞ்ச தென்னயளில ஒரு
குரும்பயளயும் விட்டு வைக்கேல நாங்கள். வெள்ள உடுப்போட ஏறினா தூர
வாறாக்களும் கண்டுடிவினம் எண்டு எல்லாத்தயும் கழட்டிப்போட்டு உள்ளுக்க
போட்டிருக்கிற அரை களுசானோட வசந்தன் ஏறினான் எண்டா உடும்பு தோத்து
போயிடும்..சரி பாவம் பெடியள் படிச்சு களச்சு போயிருக்குங்கள் இளநீய
குடிச்சிட்டு போகட்டுமெண்டு நினைச்சுபோடாதங்கோ...வட்டுக்க நிண்டு
கொண்டுதான் ஐடியா கொடுப்பான், மச்சான் முட்டுக்காயள தொட்டுபோடாதைங்கோ
உரிச்சுவித்தா இவ்வளவுபேரும் கொத்து தின்னலாம் எண்டு.ஆசை வார்தைகாட்டி
அதுக்காகவே நாங்கள் கீழ வேலை செய்வம், விழுந்த குரும்பயள், பன்னாடயள
பொறுக்கி முன் வாய்க்கால்ல எறிஞ்சு “பீல்ட”
கிளியர் பண்ணவும் இருளவும் சரியாயிடும்.பேந்தென்ன கல்லரியிறத அடுத்த நாள்
தள்ளிவைச்சுப்போட்டு குழுவ கலச்சு அடுத்தநாளும் அதே குழு அதே வேலைக்காக
ஒன்றுகூடி சின்ன மாற்றம் கிறவுண்ஸ்சடி தென்னயள கிளியர் பண்ண ஒப்படை
அப்படியே தொக்கி நிக்கும்.ரீச்சரும் விடாம கத்தி கத்தி ஒவ்வொரு கல்லா
ஒவ்வொரு நாளும் வச்சு கட்டி முடிச்சம்.(கணக்குபண்ணி பாருங்க எத்தனை
தென்னயில கைவைச்சிருப்பமெண்டு.பள்ளிகூட தென்னையள் முடிஞ்சு ஆச்சிரமகாணி
ஊராற்ற தென்னயள்......அந்த துன்பியல் நிகழ்வுக்கு குழு சார்பாக
தற்போது மன்னிப்பு கோரப்படிகிறது்)தனி மாணவ ஒப்படையின்போதும் தனித்துவம்
இருக்கவேண்டும் என்ற நினைப்பில் ரீச்சர் மதுப்பழக்கம் சம்பந்தமா
எழுதப்போறன் தலைப்புத்தாங்க என்றபோது “மதுவும் மதுப்பழக்கமும்” என்ற அவரி ஆலோசனைக்கமைவாக அதை எழதி முடித்திருந்தேன்.
2010.மீள
ஒரு முறை கல்லூரியை காணும் வாய்ப்புகிடைத்து போனபோது யாருமற்ற அநாதயாய்
கோலமிழந்து களவாய்தன்னும் தன் இளநீயை பிடுங்கமாட்டார்களா என ஏங்கும்
கற்பகதருக்கள்....
எம்
குழு ஒப்படை...காலம் கரைந்து,ஓடும் நீரில் கரைந்து மண்மேடாய்....கரைந்த
ஒவ்வொரு கல்லிலும் எம் பிரபாளினி ரீச்சர் ஆயிரம் நினைவுகள்
காணும்போதெல்லாம் உள்ளம் எமக்கு சொல்லும்.. ////தயவுசெய்து
அகற்றிவிடாதீர்கள் அதை...////
பிரபாளினி கண்திறந்த தெய்வம்......
தெய்வமாய்.........................
செல்வராசா சேந்தன்
2002 வர்தகப்பிரிவு
கிளி/இந்துக்கல்லூரி
3 comments:
நினைவுகள் நன்றாக இருக்கிறது.தொடர வாழ்த்துகள் சேந்தண்ண
தொடர வாழ்த்துகள்....
Post a Comment