வாரணம் ஆயிரம்
It’s easy. Just like driving a car. Having a good
time… and don’t tell Amma Ok
நீங்க தான் என்ணோட Hero Dady.
……………….
என்ன exam
Dad.. Chemistry..
ம்ம்.. அப்புறம் லோக்கலா தெருவில நின்னு பொண்ணுங்க கூட பேசுறத பாத்தன்….
அது… வந்து… Question
Paper….
அது வேணாம்… உனக்கு வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு. வீட்டுல உக்காரவச்சு
பேசு.. I have no problems…
நீங்க தான் என்ணோட Hero Dady.
……………………
எனக்கு எல்லாமே ஞாபகம் வருத்து டாடி..
உங்க அழகான முகம்
உங்க உடம்பு
உங்க குரல்
நீங்கதான் என்னோட எல்லாமே…
………………………
வாரணம் ஆயிரம் part 2
வாரணம் ஆயிரம் part 2
1996 .பல்லவராஜன்கட்டு. காட்டு விலங்குகள கலைசுப்போட்டு அதுகளின்ட
இடத்துல நாங்க குடியிருந்த நேரம். ரயருக்க வைக்கோலும் துணியுமாய் உந்துருளிகள் உருண்ட
காலம்.. அப்பா சங்கத்தில வேலை எண்டதால நாங்க உந்த விசயத்துல கொஞ்சம் வசதி..ரயரில பூ
இல்லாட்டியும் காம்பாவது தெரிஞ்சது…தருமபுரத்தில தான் சங்கத்தலைமையகம் இயங்கினதால கிழமைக்கு
ஒருதரம் தான் வீட்ட வருவார்…படிச்சு கிழிச்சதால வருட இறுதி பள்ளி விடுமுறை..இம்முறை
அப்பாவோட தருமபுரம் போய் ஒரு உலக சுற்றுலாவ முடிக்க ஏற்கனவே போட்ட திட்டப்படி அப்பாண்ட
சைக்கிள் பாரில ஒரு துவாய போட்டு ஆஜர்.
ஸ்கந்தபுரம் கழிய
முன்னமே அப்பாவுக்கு மூச்சு வாங்கத்தொடங்கிவிடும்..ஒற்றகாலால போட்டுக்கொண்டிருந்த பெடல்
இப்ப பாருக்கு(Bar) ரெண்டு பக்கமும் காலப்போட்டு முழு எஞ்சின் சக்தி கொடுக்க எனக்கும்
மூச்சு வாங்கதொடங்கிவிடும்..
தருமபுரத்துக்கு
சனமெல்லாம் இடிபட்டுக்கொண்டு இடம்பெயர்ந்தபடியால் உலக வர்த்தக மையமாய் மாறி இருந்தது.ரெண்டு
பக்கமும் பிராக்கு பாத்துக்கொண்டு மிதிச்சதால உந்துருளி உலங்குவானூர்தியாய் பறந்தது…
கொத்துரொட்டியும்
வாய்ப்பனும் வாழைப்பழமும் சங்க பேக்கறியில வறுத்த விஸ்கோத்தும் வாங்கிச்சாப்பிட்டே
அப்பாண்ட அரைப்போக்கற் காலி.உவன வச்சிருந்தா தான் காலி எண்டு நினைச்சாரோ என்னமோ வெள்ளிக்கிழமை
பின்னேரம் நாங்கள் வீட்ட போவம் தம்பி….
அரைமனதோட மீண்டும்
அப்பாண்ட சைக்கிள் பாரில் ஆஜர்..
பயணம் அக்கராஜன்
சந்திதாண்டி கொஞ்சதூரம் வரைக்கும் சகஜமாத்தான் இருந்தது.ஜந்தாங்கட்டை காட்டுக்க வரேக்கதான்
பொடார் எண்டு பின்சில்லு இடிச்சது.இவ்வளவு நேரமும் சர்ர் சர்ர் எண்டு நின்னுகோரி வர்ணம்
இடைக்கிடை என்னைத் தேடி வரணும் பாட்டுக்கு வாற லைட்டிங் மாதிரி பத்திக்கொண்டிருந்த
கெட் லைட் சேடமிழுத்து அடங்கிப் போச்சு….கும்மிருட்டு பாத்தனான் கும்மிருட்டு காட்டுக்குள்ள
அண்டய்க்குத்தான் பாத்தன்.அப்பாவில பாசம் மெத்தி கைய இறுக்க பிடிச்சுக்கொண்டன்.
அப்பா…
ம்…என்ன தம்பி காத்துப்போட்டுது
…நேரமும் பத்தரையாப் போட்டுது..என்ன கரைச்சலடா.. சரி வா உருட்டுவம்…யோசியாத விடியிறதுக்க
வீட்ட போய் சேந்திடுவம்… இருட்டுக்குள்ளயும் அப்பாண்ட முகத்த தேடினேன்…
உலகத்திலயே அக்கராஜன்
முழங்காவில் ரோட்டு பேமஸ்.அதில வாகனம் ஓடினா என்ன உருட்டினாலே International
Driving licenses இப்பயும் குடுத்துக்கொண்டிருக்காங்கள்..எங்க கால் வச்சாலும் பள்ளமாத்தான்
இருக்கும்.நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் சீக்காய் விசிலில அலேட் பண்ணிக்கொண்டு
முன்னுக்கு வாற சைக்கிள்காரரிட்டயும் வெளிச்சம்
இருக்காது .செருப்பையும் சர்ர்க்கு சர்ர்க்கு எண்டு இழுத்துக்கொண்டு பணிஸ்மெண்ட்காரங்களுக்கு
அவிச்ச புட்டு போல இருக்கிற கிறவல் ரோட்டில ஒரு மணித்தியாலமாய் உருட்டினம்.இவ்வளவுக்கும்
எங்கள கடந்துபோன லாண்ட்மாஸ்ரர் ஒண்டும் மோட்டார் சைக்கில் ஒண்டும் சிறப்புபணி பஸ்சும்
கிளப்பின கிறவல் புழுதியில ரெண்டு பேரும் வேசம் போட்ட செவ்விந்தியர் ஆயிருப்பம் எண்டு
தெரியும்.எத்தின முறை சறுக்கினாலும் என் கைப்பிடியை விடவில்லை அப்பா..
அப்பதான் அந்த ஆச்சரியம்..மாடு
மேய்த்த இடையர்களுக்கு வானிலே தோன்றிய ஒளியாய்…காட்டுக் கரையிலே குப்பிவிளக்கோன்று
காற்றுடன் போராடிக்கொண்டு தன் இருப்பைக்காட்டியது.அந்த வெளிச்சத்திலும் பி.சி.சிறிராமின்
படங்கள்ள தெரியிற மாதிரி நாலு பழைய ரயருக்குள்ள ஒரு பலகையில சுண்ணாம்பால தூய தமிழில்
ஒட்டகம்.இங்க பெயர்ச்சொல் இல்ல வினைச்சொல்..அதுவா முக்கியம்.
நாலு காட்டுக்கப்பு
வெயிலும் மழையும் ஒழுகாமல் இருக்க எதையெல்லாம் செருகலாமோ அதயெல்லாம் மண்டையால யோசிச்சுப்போட்ட
கூரை பற்றிப்பெட்டிக்க தண்ணி ஒரு சுத்தியல் நாலு சாவி குறடு ரயர் கழட்ட ரெண்டு வளைஞ்ச
கம்பி ஒரு சொலுசன் ரின் ஒட்டகம் ரெடி..
ரொம்ப அடி வாங்கின சாறம் இப்பதான் கழட்டி கப்பு கெவத்தில மாட்டின உதுல ஒரு அலுவலுக்கு போட்டு வந்து தொங்குற நீலகலர் சேட்டு கையில ஒரு பீடி அத இழுத்ததால வந்த இருமலோட ஒரு கிழவர்… இல்ல இல்ல எமக்கு மேய்ப்பர்..அப்பாடா இவ்வளவு நேரமும் பட்டு வந்த கஷ்டத்துக்கு ஒரு குப்பி விளக்கு வெளிச்சம் கிடைச்சுட்டுது. அப்பா என்ணண்டா விடியிறதுக்குள்ள வீட்டுக்கு நடந்தே போயிடலாம் எண்டார்.. மனதுக்குள் நையாண்டி பண்ணிக்கொண்டேன்.
ரொம்ப அடி வாங்கின சாறம் இப்பதான் கழட்டி கப்பு கெவத்தில மாட்டின உதுல ஒரு அலுவலுக்கு போட்டு வந்து தொங்குற நீலகலர் சேட்டு கையில ஒரு பீடி அத இழுத்ததால வந்த இருமலோட ஒரு கிழவர்… இல்ல இல்ல எமக்கு மேய்ப்பர்..அப்பாடா இவ்வளவு நேரமும் பட்டு வந்த கஷ்டத்துக்கு ஒரு குப்பி விளக்கு வெளிச்சம் கிடைச்சுட்டுது. அப்பா என்ணண்டா விடியிறதுக்குள்ள வீட்டுக்கு நடந்தே போயிடலாம் எண்டார்.. மனதுக்குள் நையாண்டி பண்ணிக்கொண்டேன்.
க்கூம்.. என்ன காத்துப்போட்டுதே…
இருமலோடயே கேட்டார் கிழவர்.
என்னட்டத்தானே வரோனும்.இந்த
எட்டுப்பட்டி ஜில்லாவிலயே ஆலின் ஆல் அழகுராஜா நான் தான் என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு
கடைசி ரெண்டு இழுவை தான் வரும்வரை நாம் காத்திருப்பதற்காக வட்டம் வட்டமா விட ட்ரை பண்ணினார்.கடசியா
விட்ட புகையோட இருமலும் சேர்ந்து ஐயா கிபீரும்(கசிப்பு) அடிச்சிருக்கார் எண்டத குண்டுபோட்டுக்
காட்டியது.
கரியல்ல இருந்து
பாய்க்க(Bag) எடுங்கோ..
காண்டில இந்தப்பக்கம்
திருப்புங்கோ…
சாவிப்பெட்டிய இங்க
அரக்குங்கோ…
ஏகப்பட்ட கண்டிசன்கலோட
சைக்கிள் கசாப்பு கம்பியில தொங்க விட்டு பின்சில்லு பக்கமாய் ஒரு பலகயபோட்டு குந்தினார்.
வளைஞ்ச கம்பிய ரயருக்க
விட்டு ரிம்மில இருந்து ரயர கழட்டின வேகமே கிழவன் எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள்தான் எண்ட தோரணையில்
அப்பா என்னைப்பார்த்தார்.
கண்ணைக்கட்டி விட்டாலும்
ரியூப்ப கழட்டுவன் தம்பி… உள்ள போன கிபீர் கதைத்து எங்களோட…
என்ட ஐ.சி யிலயே
தொழில் எண்ட இடத்தில சைக்கிள்கடை எண்டுதான் போட்டிருக்கு என்ன..
!!!!!!!
நேத்தும் இப்படித்தான்
ரெண்டு பேர் ஒண்டா காத்துபோய் ரீயூப்பு கிழிஞ்சு வந்தினம்.நான் அந்தமாதிரி வைக்கல்
அடைஞ்சுகுடுத்தனான் என்ன…
ரயரில இருந்து ரியூப்
வந்திட்டு
யாழ்ப்பாணத்தில
திரவியம் கடை எண்டு கேட்டா சகலரும் சொல்லுவினம் என்ன…
தம்பி பம்மை எடும்.பற்ரிப்பெட்டிய
இங்க தாரும்..
நான் குப்பிவிளக்க
தூக்கிப்பிடிக்க கண்ண டிம்பண்ணி டிம்பண்ணி தண்ணீக்க ரியூப்ப அமத்தி சுத்தி சுத்தி பாக்க
ஒரு இடத்தில ரயர் மூச்சுவிட்டது.இந்தா இருக்கார் மச்சான்…சொந்தம் கொண்டாடினர் கிழவர்.
எனக்கு உந்த தண்ணி
தேவயில்லை வாயில வச்சுப்பாத்தே ஓட்டயகண்டுபிடிப்பன்..
நாங்கள் ஆச்சரியமாக
பாத்தது கிபீர உசுப்பேத்திவிட ரஜனி ஸ்ரைலில் காலுக்கால ரியூப்ப கொழுவி பின்பக்கத்தால
எடுத்து சப்பாணம் கொட்டி நிலத்தில இருந்தார்.சாவிப்பெட்டீக்க கையவிட்டு துலாவி ஒரு
மொட்டை வாள்பிளேட்டை எடுத்து ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டு தாளத்துக்கு ராவத்தொடங்கினார்.எப்பதாண்டா
முடிப்பான் என்கிற ஆவலோட வித்தைக்காரன் குரங்கைவிட்டு சுத்திறதபோல ஆஆவெண்டு பாத்துகொண்டிருந்தேன்.அலாவுதீன்
விளக்குபோல சொலுசன் ரின்னை பக்குவமாய் திறந்து துளியாய் கையிலெடுத்து மனமாய் பூசுற
மாதிரி பெரிய வட்டம்போட்டுக்காட்டினார்.பின்னுக்கு ஸ்ரைலா திரும்பி ரியூப்போண்டில ஒட்டுப்போட
சின்னத்துண்டொண்டை வெட்டி அதயும் ராவி சொலுசன் தடவி பஞ்சர் மேல ஒட்டுப்போட்டு முடிஞ்சுது
அலுவல் எண்ட பீலோட நிமிர்ந்து பார்த்தார் கிழவர்.
அப்புறம்…. எந்த
ஊர் எங்க செல்லடி எங்க கடலுக்க சண்டை எத்தின ஆமி செத்தது எண்டு சொலுசன் காயிறவரைக்கும்
விடுப்புக்கதை நீட்ட வெளிக்கிட்ட கிழவனை கெதியாய் முடியுங்கோய்யா எண்டு அப்பா கேட்டதால
இப்ப முடிஞ்சிடும் எண்டு காலுக்க கொழுவியிருந்த ரீயூப்ப எடுக்கதான் தெரிஞ்சுது பாழ்பட்டகிழவன்
ஒட்டுப்போட வெட்டினதும் இதே ரியூப்பிலதான் எண்டு ஒருகணம் வடிவேல்கணக்கா அப்பிடியே சாக்காயிட்டேன்…கிழவர்ட
முகத்தில இதுவரை தாண்டவமாடிய கிபீர் கட்டுப்பாட்டை இழந்து எங்கோ தரைதட்டி இறங்கியது
…
ஐயா ரியூப்பின்ட
விலை ரெண்டாயிரம் குடுத்தாலும் வாங்கேலது இப்பபோய் இப்படி பண்ணிப்போட்டியலே…. முகத்தில்
எரிச்சலை வெளிக்காட்டாமல் அப்பா.
ஐயோ.. மன்னிச்சுடு
ராசா… ஓமெண்டா வைக்கல் அடைஞ்சு தரட்டே..
!!!!!!!
வா தம்பி இவ்வளவு
நேரமும் ரியூப்போட உருட்டினாங்கள் இப்ப கொஞ்சம் பாரம் குறைஞ்சிருக்கும் வடிவா உருட்டலாம்.நீ
பாரில ஏறி இரு நான் உருட்டுறன்ஆச்சரியமாய் அப்பாவின் முகத்தைப்பார்த்தேன்…
நீங்கதான் அப்பா என்னேட HERO…




No comments:
Post a Comment