‘‘மாணவர் எழுச்சி நாளுக்கு எங்கட
பள்ளிகூடத்தால நாடகம் தரட்டாம்..‘‘
ஆறுமுகதாஸ் அதிபர்
வேட்டி மடிப்பை இழுத்துக்கொண்டெ.
‚‘‘ஓம் சேர்..ஆன ஒண்டும் வருதுகளில்லை.சுத்திப்போட்டு
ஓடுதுகள்.‘‘
தில்லானா டீச்சர்.
‚‘‘ஓயல் ஏயல் காரர விட்டிட்டு ஒம்பதயும்
பத்தயும் புடியும்.ஒண்டு ரெண்ட இல்லாம முழுத்தயும் கொண்டு போய் பழக்கும்.இல்லாட்டி
கிரவுண்டில மிச்சம் நிக்குங்கள்‘‘
ஆறுமுகதாஸ் அதிபர்
***.
‚‘‘ஒம்பது பத்து வகுப்புகாரர் எல்லாரையும்
தில்லானா டீச்சர் ஆலமரத்துக்கு வரட்டாம்ம்ம்ம்...‘‘‘ தண்டோராகாரன். ஒவ்வொரு பள்ளிகூடத்துக்கும்
குறஞ்சது ரெண்டாவது இந்த கேஸ் இருக்கும்.எப்படா பிரச்சாரகாரர் வருவாங்க..எப்படா வகுப்பு
குழம்பும் எண்டு இருந்த எங்களுக்கு அந்தமாதிரி .
***-
கனகபுரம் மகா வித்தியாலயம்
, உருத்திரபுரம் மகா வித்தியாலயம் , ஸ்கந்தபுரம் இலக்கம் 02 பாடசலைகள் ஒரே காணியில்
ஒரு கிரவுண்ட சுத்தி குடியிருந்த காலம்.எந்த புள்ளயள் எங்க படிக்குது எண்டு ஒரு புள்ளயாலயும்
கண்டு புடிக்கேலாது.இடவேள மணி அடிச்சுதெண்டா கிறவுண்ட சுத்தி மணியிலயாண் கணக்கா மோச்சுப்போய்
இருக்கும்.ஒரு புட்போல் போஸ்ட்க்கு நாலு கீப்பர் நிப்பினம்.நாலு மச் ஒரே நேரத்தில ஒரே
கிரவுண்டில நடக்கும். அதுவும் விளையாடினா பந்து ஊத்தயா போகுமெண்டு ஆறுமுகதாஸ் அதிபர்
தரமாட்டார்.கிரிக்கட் பந்தில தட்டி தட்டி கொண்டு போக பெல்லுமடிக்க சரியா இருக்கும்.அப்பிடியெ
மொச்சுக்கோண்டு கிணத்தடிக்கு ஓடினா கால் வைக்க இடமிராது.அடுத்த வாளிக்கு கயித்தில புடுங்குபடுறதிலயே
வெறும் வாளிதான் வந்து சேரும்.தீத்தம் மாதிரி ரெண்டு சொட்டு வாய்க்க விட்டுகொண்டு வகுப்புக்கு
ஓட வேண்டியதுதான்…
***.
ஆலமரத்தடியில நாப்பது
பிள்ளைகளுக்கு கிட்ட தில்லானா டீச்சரை மொச்சுக்கோண்டு….
டீச்சர் கையில
ஒரு கட்டு பேப்பர்…நாடக ஸ்கிரிப்ட்டாம்..
இதுக்கு நாலு பேர்,இதுக்கு பத்துபேர்,இதுக்கு
ஒராள்….
டீச்சர் பிளான்
பண்ணுரா…
விலத்தி நில்லுங்கோ … தெரியுதில்ல..
கையில தடி.
மச்சான் உதுக்க போனா அவளவுதான்.பின்னேரம்
வா காலம வாவெண்டு கிளிஞ்சுது கத.பேசாம பின்னுகே நிப்பம்
சதீசன் சொல்ல நண்பர்கள் சிலர் சேர்ந்துகொண்டோம்.
சரி எல்லாரும் இங்கால வாங்கோ…
இது தான் கத. டீச்சர்
விளங்கப்படுத தொடங்கினா…
ப்பூ..மோக்க நாடகம்.இத
தானே எல்லாரும் உருட்டினம்.வீதி நாடகதிலேந்திருந்து புலிகளின் குரல்வரை.அதுசரி இத விட்டா
வேரென்ன இருக்க போகுதுதெண்டு முகத்த சுளிச்சா டீச்சர்ட முழி பெரிசாகிடும்.
இந்த மேடைய மூண்டா பிரிக்க போறம்.(மூன்று களமாம்.)ஒண்டில கொழும்ப காட்டபோறம்.ஒண்டில
தமிழ்ச்சனத்த காட்டபோறம்.மற்றது கதை சொல்லுற ஆள்.(கதய சொல்லாட்டி சனத்துக்கு
விளங்காதுகாணும்)
நடு நடுவே நாட்டியகாரர்..(இது வேறயா?இப்பவே கண்ண கட்டுதே..)
டான்சுக்கு பிரச்சனை
இல்ல எங்கட ஆஸ்தான நர்த்தகிகள்…(அதுகள் போரம்மா போரம்மா தொடங்கி சினிமா சோக பாட்டுக்கெல்லாம்
கிளாசிக்கல் ஒரேமாதிரி ஆடுங்கள்.)
கத சொல்லுற ஆளுக்கு
உமாமகேஸ்வரி..(விட்டால் ஆளில்லை.முகத்தில பாவம் காட்டுறதில)
கொழும்புக்கு சந்திரிக்கா,ஜே.ஆர்,
பிரேமதாஸா,ரத்வத்த(அவர் இல்லாம எந்த நாடகமும் கிடையாது)
மிச்சத்துக்கு
சனம் ஒரு பத்து
பேர் காணும்.அப்பதான் அதிபர் சொன்னது ஞாபகம் வர இல்ல மிச்சம் எல்லரும் சனம்.சரியா….
சந்திரிக்காவுக்கு திவ்வியா நடி.நீதான் வெள்ளை.
ஜே.ஆர்ருக்கு ஆருக்கு மூக்கு நீட்டு???
சதீஸன் டீச்சர்……… மாட்டினாண்டா…
இல்ல டீச்சர் நான்
மாட்டன்.நான் நடிக்கமாட்டன் வெணுமென்டா இவன விடுங்கோ… என்னைக் காட்டினான்.
இல்ல அவனுக்கு
மூக்கு சப்பை நீ தான் வா..
என் மூக்கால் ரத்தம்
கசிந்தது. சதீஸன் இருடீ….
பிரேமதாஸாவுக்கு
ஆர போடலாம்..ம் ம் ம் பளிச்சிட்டது டீச்சருக்கு வசந்தன் எங்க…
கறுவல்
உன்ன வரட்டாமடா…(சேம் பிளட்)
1000
வால்ட் பல்ப் பல்லில் எரிய பின்பக்க கலுசான் மண்ண தட்டிகொண்டு போனார்.
அப்பாடா
தப்பிச்சன்..இப்படியே எஸ்கெப்பாகிட வேண்டியது தான்.
சனத்துக்கு எல்லாரும் வாங்கோ..
அடச்சீ…
நீ அப்பா, நீ அம்மா நீ கிழவன்
நீ கிழவி நீ காயபட்டவன், நீ மாணவன்(பர்போமன்ஸ்
பண்ண கரக்ரர் எனக்கு), நீ ….
சரியோ,,,
காலேக்கர்
காணியில அரைவாசிக்கு தடியால சதுரம் போட்டாச்சு.இதுதான் மேடை…(அவளவு சனத்தயும் அடக்கோணுமே.)
ஸ்கிரிப்ட்
இது தான்.கொழும்பு வட்டத்துக்க ஒரு கதிரய நடுவுல வச்சு ஆட்சியாளர்கள் சுத்தோணும். அவய்
சுத்தேக்க சனம் ஸ்டில்ல நிக்கோணும். கதை சொல்லுவர் கதைகேக்க சனமும் ஆட்சியாளர்களும்
ஸ்டில்ல நிக்கோனும் இவ ரெண்டு பேரும் ஸ்டில்ல நிக்கேக்க சனம் மெதுவா சிலோமோசனில எலும்பி
நெஞ்சில அடிச்சடிச்சு அலறோணும் .சனத்துக்கு ஒரெயோரு வசனம் தான் கையில ஒரு குழந்தய வச்சிருக்க
மாதிரி பிடிச்சு கொண்டு ஆட்டி ஆட்டி ‚‘‘ ஏன் எங்கள கொடுமைப்படுத்துரீயள் நாங்கள் என்ன பாவம் செய்தோம் நாங்கள் தமிழராய் பிறந்தது
குற்றமா எங்களுக்கு விடிவே வராதா?‘‘
அப்ப கையில வாளும் பின்னால வாலும்
தலையில ஒரு சட்டி தொப்பி நாக்க வெளியால தொங்க போட்டுகொண்டு கால அகட்டி அகட்டி வெற்றுகிரகவாசிகணக்கா
ஒருத்தன் கிபீர் சத்தம் போட்டுகொண்டு வந்து சனத்த அடிக்க எல்லோரும் குய்யோ முறையோ எண்டு
கத்திகொண்டு கீழ விழவேணும்.
ஒவ்வொரு
சீனும் மாறேக்க ஒரு பாட்டு
தையா
தக்க தையா தக்க
காட்சி
மாறுது ஆட்சி மாறுது
காலம்
மாறவில்லை எங்கள் கோலம் மாறவில்லை.
தையா
தக்க தையா தக்க
தையா
தக்க தையா தக்க
வசந்தன் நல்லா கால தூக்கி
ஆடும் பாப்பம்.(நமட்டுச்சிரிப்பு)
வேட்டி
விடுதில்ல டீச்சர்..
இடக்கிடை
நர்த்தகிகள் வந்து கையாலயே ஏ.கே47,பிஸ்டல்,அட்லறி,கிபீர்,ஐஞ்சிஞ்சி எண்டு முத்திரை
பிடிச்சு ஆடீட்டு போகுங்கள்.(டான்ஸின் எந்த சிலபஸில இது கிடக்குதோ தெரியாது)
கடசியா
ஒரு வரிபோட்டவர் வந்து சனத்த அள்ளிக்கொண்டு போக எல்லரும் மேடைக்கு முன்னால வந்து இருகரம்
கூப்பி வணங்க,
நன்றி
வணக்கம்.
பாருங்கவன்
நூறு மேடை எண்டாலும் ஏறும்… டீச்சரிண்ட எதிர்பார்ப்பு.
இத
நாடகமெண்டு ஒரு நாளில்லை ரெண்டு நாளில்லை பத்து நாள்.பக்கத்து பொது பாத்துரூம் மணக்க
மணக்க ஆலுக்கு கீழ் வச்சு பழக்கினாணுங்கள்,இடக்கிட ஒவ்வொரு வாத்தியா வந்து பாக்க திரும்ப
திரும்ப ஆடிக்காட்டி…முடியல..
*****.
ஆறாந்திகதி
ஆறுமணிக்கே வந்துடுங்கோ எங்கட மூண்டாவது நிகழ்ச்சி.சரியே…. உங்கட உங்கட கொஸ்டியூமுகள
மறக்கம கொண்டந்திருங்கோ சொல்லிபோட்டன். கோயில் மாடு ரியக்சன்.
ஆய்…
யாருசனம் வரப்போது.ஆறுதலா போவம் சொன்னனேரத்துக்கு எப்பாச்சும் நிகழ்ச்சி தொடங்கியிருகே.வாடா அனுசில வடை சாப்பிட்டுபோவம்.ஒரு
நாள் ஜனாதிபதி எண்ட புழுகத்தில வசந்தன் தான் பில் குடுத்தான்.
ஸ்கந்தபுரம்
முருகன் கோயிலுக்கு போகமுதலே ஸ்பீக்கர் அலறியது. மாணவர் நாள் எண்டு வெள்ளை சீலையில
பெணர்.சிவப்பு மஞ்சள் கொடிகள்.பங்சன் சிறப்பாதான் இருக்குமோ..நாமதான் பிழையா எடை போட்டிடமோ..
என்னடா
விலத்தேலாத சனமா இருக்கு.புதினம் பாக்கிறத்துக்கே பிறந்திருப்பாங்க போல…
பாவிபயல்
வேலிக்கயாலேயே நாடகம் பாத்திருப்பான் போல.,,
மச்சான் நீ இனி பேமஸ் தான்.உனக்கு
ரசிகர் எல்லாம் கூட போகுது.
விர்டா விர்டா..
ஆனா மச்சான் டீச்சர் சொன்ன
மாதிரி நல்லா கால தூக்கி தூக்கி ஆடு என்ன.
என்
அட்வய்ஸ் அவன் காதிலயே விழல.
VIP
பாஸ்காரர் மாதிரி சனதுக்குள்ளாலயே சைக்கிள்ள மேடைக்கு பின்னால விட்டோம். படங்கால சுத்தி
பின்னுக்கு மறைச்சிருந்தார்கள்.மேக்கப் ரூமாம்.ஐஞ்சுமணிக்கே டான்ஸ்காரியள் சலங்கயோட
ரெடி.இன்னும் ஜடைவேலை பாக்கி இருந்தது.
நல்லவேளை
மச்சான் பொடியனா பிறந்தது.ரெண்டு நிமிச ஆட்டத்துக்கு பார் அலப்பறய…
அப்பதான்
கவனிச்சன் மேடைய..
பட்ஜெட்ல
பிரச்சனை போல ஒரெ ஒரு மிசின் பெட்டிதான் மேடை.அட அதில ஒரு வில்லுபாட்டு நடத்தினாகூட
கடத்தை வெளியாலதான் வைக்கோணும்.எங்கட நாடகத்த எப்புடி இதில..
டீச்சர் மேடை காணாது போல கிடக்கு….
பேசாம இரும்.கொஞ்சம் அஜஸ்ட்
பண்ணி நிண்டுகொண்டு நடியுங்கோ…
டான்ஸ்காரியள
மேக்கப் போடுறதயே குறியாய் நிண்டுகொண்டு.
பாத்திரங்கள இனி குறைக்கேலாது
எல்லா பாத்திரமும் முக்கியம் தான் நாடகத்தில..டீச்சர்.
சே..
கடசி நேரத்திலயும் மிஸ்ஸாப்போட்டுது.
****.
மாலை
8,00 மணி
அன்பான ரசிகப்பெருமக்களே இதோ
நீங்கள் ஆவலுடன் எதிர் பாத்து காத்திருந்த மாணவர் எழுச்சி நாள் நிகழ்வுகள் ஆரம்பமாக
உள்ளன.மைக் ரெஸ்ட் ஒண் டூ ..ஒலி வாங்கி பரிசோதனை ஒன்று இரண்டு …
இதோட
பத்தாவது தரம் சொல்லிபோட்டான்.
முன்னுக்கிருந்து
மேடைய அண்ணாந்து பாத்தே களைத்துபோய் நித்திரை தூங்கின ரெண்டு திடுக்கிட்டு எழும்பி
பிறகும் வேறும் மேடைய மட்டும் பாத்துகொண்டிருந்ததுகள்.
அடுத்த தரம் சொல்லத்தான் நிகழ்ச்சி
தொடங்கும் பாரன் எண்டு ரெண்டு கச்சான்
சுருலுக்கு பேற் கட்டிகொண்டதுகள்.
பனீக்க
காச்சல் வந்தாலுமெண்டு பெருசுகள் துவாயால தலயபோத்திக்கொண்டு இடத்தவிட்டு ஆணி அடிச்சபோலயெ
நகராம இருந்ததுகள்.
ஒரு
சனத்தயும் ஏமாத்தாம நிகழ்ச்சி 9மணிக்கு ஸ்ராட்.
முதலாவது
நிகழ்ச்சியாக மத்திய கல்லூரி மாணவர்களின் எழுச்சிப் பாடல்கள்…
மூக்கால
ரெண்டு பாடிப்போட்டு போச்சுதுகள்.
கை
தட்டல்..கரகோசம்..கூக்காட்டல்…நாலஞ்சு விசில்…
அடுத்த
நிகழ்வாக அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்களின் அசைவும் இசைவும்.போரம்மா பாட்டுக்கு
கறுத்த உடுப்போட எக்ஸ்சசைஸ்.
கை
தட்டல்..கரகோசம்.. கூக்காட்டல்… நாலஞ்சு விசில்….
ஆம் அடுத்த நிகழ்வாக நீங்கள்
ஆவலுடன் எதிர் பார்த்த கனகபுரம் மாணவர்களின் நாடகம், விழ விழ எழுவோம்ம்ம்ம். புல் எக்கோ,,,,, கோ,,,, கோ,,,,
*******-
திரை
மூடப்பட்டுள்ளது,
மைக்
ஒன்
நாயே இங்கவா.. நீ சனமெல்லே
இதுக்க நில்,நீ தள்ளிப்போ தள்ளிப்போ..
எங்க போறது மேடைக்கு வெளியாலதான்
போகோணும்,
மோதகம் முதுக காட்டம நில்லுடா..
பட்டபேர சொல்லாத எண்டு உனக்கு
சொன்னான் வாங்கபோரார்.
சொன்னான்
பத்துபேர் சனத்துக்கு காணுமெண்டு.அதிபர் தான்..டீச்சர் அப்ப தான் அலுத்துக்கொண்டா..
அரசாங்ககாரர் இஞ்சால சனப்பக்கம்
வராதயுங்கோ..பாக்கிற சனம் குழம்பீடும்.ஒக்கே ரெடி.
முழுச்சம்பாசணையும்
கரும்புத்தோட்டவாய்க்கால் வரை கட்டி இருக்கிற
ஸ்பீக்கர் வெளிச்சம் போட்டிருக்கும்..
****.
திரை
விலகத் தொடங்குகிறது.முன்னுக்கு கட்டியிருந்த போக்கஸ் லைட் ஒண்டயும் முன்னுகெங்களுக்கு
தெரிய விடாமல் பண்ணியிருந்தது.சனம் பாக்குதா இல்ல எழும்பி போயிட்டுதுகளா ஒண்டும் தெரியெல்ல.மேடையில
வேற நிக்க இடமில்ல.சனத்துக்கு நடிச்சவன் ஒருவன் இடமில்லாமல் சந்திரிக்காவோட ஒட்டிகொண்டு
நிக்க கீழ இருந்து ஆரோ பங்கேர்டா ஒருத்தன் அரசாங்கத்தோட சேந்துட்டான்.துரோகி
ஸ்கிரிப்ட்ல
இல்லாத பாத்திரமெல்லாம் கூட்டம் அனுமாணிக்க தொடங்கீட்டு.எல்லாம் இந்த மேடயால வந்த குழப்பம்.
உமாமகேஸ்வரி
தொடங்க நாங்களும் ரியக்சன் பண்ண ஆரம்பித்தோம்.
இது ஜெ.ஆர்
காலம்….
தையா
தக்க தையா தக்க
காட்சி
மாறுது ஆட்சி மாறுது
காலம்
மாறவில்லை எங்கள் கோலம் மாறவில்லை.
தையா
தக்க தையா தக்க
தையா
தக்க தையா தக்க
இப்ப
வால்,வாள் என்ரி(entry)..
வெளியால
நிண்டு ஒருத்தன் ரீரெக்காடிங்.வாய்க்க மைக்க ஓட்டிகொண்டு கிபீர் சவுண்ட் விட நாங்கள்
விழவேணும்..
ஒரு
செக்கண்ட் லேட். எல்லாம் இடம் பிடிச்சுவிழுந்துட்டுதுகள்.ஐயோ விழ ஒரு இடம் கிடைக்கேலயே
எனக்கு…
தேடினேன்
தேடினேன் மேடை மூலைவரை தேடினேன்.ஒரு போட்டுக்கூட கிடைக்கல.ஆகா நாடகமே மாறப் போகுதே…
கந்தபுர
முருகா, மண்ணெண்ணைப் பிள்ளயாரே காப்பாத்து… கண்ணை மூடிக்கொண்டு பொத்தெண்டு விழுந்தேன்.
என்ன
ஆச்சரியம் ஒரு நோவும் இல்ல முழிச்சுப்பாத்தா தனலட்சுமிக்கு மேல…
+++++
விருமாண்டி
படத்தில ஒரு சீன் வரும்,தலைவரும் அபிராமியும். தலைவர் அந்த டோச்லைட்ட கீழ போடுவார்.அது
அங்கயும் இங்கயும் ஆடி கடசியா களச்சுப்போய் ஒரு இடத்தில நிக்கும்--
ஓப்பிண்
பண்ணினா ரெண்டுபேரும் மூச்சிலயே கதைப்பினம்.
+++++
சொரிடி
நான் விழ இடமில்லாமல் போட்டுது அதுதான்..
கண்ணாலயே
பறுவாயில்ல சொன்னாள்.
கோவமா..
ம்கூம்..
பாரமா
இருக்கிறனா..
இல்லடா…
ஏன்
மூக்கு குளிருது….
பனிதானே…
ம்ம்ம்
கண்ணுக்கு
கீழ சின்னதா எதோ…
அது
மச்சமடா…
ஓ….
இண்டைக்கு
மீன்தானே சாப்பாடு…
ம்ம்ம்.எப்புடி
தெரியும்.
இதென்ன
நீர் போட்டது சந்தன பவுடரேண்டே எனக்கு தெரியும்…
ச்சீ…
பின்னணியில
இளையராஜா மியூசிக்…
நீபார்த்த
பார்வைக்கொரு நன்றி…நமைச்சேர்த்த மேடைக்கோரு நன்றி..அயராத இரவு சொல்லும் நன்றி நன்றி….
நர்த்தகிகளின்
டான்ஸ்….
அரசாங்கத்திட்டவிட
இதுகளிட்ட சனம் அதிகமா உளக்குப்பட்டுதுகள்..
‚‘‘தையா
தக்க தையா தக்க
காட்சி
மாறுது ஆட்சி மாறுது…‘‘.
மெதுவா
மெதுவா எழும்பி அவளை விடுபட வேண்டியதாப் போச்சு…
சே
இந்த காட்சிய கனநேரம் வச்சிருந்துக்கலாம்..
………
…….
தையா
தக்க தையா தக்க
காட்சி
மாறுது ஆட்சி மாறுது……
சந்திரிக்கா
ஆட்சி…
பிரியாவையே
டாக்கட்பண்ணி பின்னாலயே துள்ளிக்கொண்டு.
எப்புடியும்
லேட்டாத்தான் விழவேணும்.
*******.
நன்றி
வணக்கம்
மேடைக்கு
பின்னால வர,
வசந்தன்
கேட்டான் ‚‘‘மச்சான் துள்ளேக்க கால் நோகுதுடா.அடுத்தமுறை நீ ஜெ.ஆருக்கு வாவன் நான்
மாணவனுக்கு நடிக்கிறன்.
ஆகா..
கண்ணுட்டானே சூட்சுமத்த கண்ணுட்டானே…..




6 comments:
மேடைக்கு பின்னால வர,
வசந்தன் கேட்டான் ‚‘‘மச்சான் துள்ளேக்க கால் நோகுதுடா.அடுத்தமுறை நீ ஜெ.ஆருக்கு வாவன் நான் மாணவனுக்கு நடிக்கிறன்.
Thats vasanthanda
Superb Da
நல்லா செய்றீங்க நண்பரே!!
Woooooow...
Post a Comment